NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கம்போடிய பாடசாலையில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு !

கம்போடியா நாட்டில் 1970களில் தொடங்கிய உள்நாட்டு போர் 1990களின் இறுதி வரை நீடித்தது.


இந்த போரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
குறித்த போரின்போது ஏராளமான கையெறி குண்டுகள், கண்ணிவெடிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.

போர் முடிந்த சமயத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அங்கு இருந்ததாகவும் அவற்றில் ஏராளமான வெடிகுண்டுகள் அழிக்கப்பட்டதகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சில இடங்களில் அந்த வெடிகுண்டுகள் வெடிமருந்து கிடங்குகளில் புதைத்து வைக்கப்பட்டன.

அந்தவகையில் கம்போடியாவின் வடகிழக்கு மாகாணமான கிராட்டியில் உள்ள குயின் கோசாமாக் என்ற இடம் வெடிமருந்து கிடங்காக பயன்படுத்தப்பட்டு அதன்பிறகு அந்த இடத்தில் உள்ள ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த இடத்தில் ஒரு பாடசாலை கட்டப்பட்டுள்ளது.
தற்போது அந்த பாடசாலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருவதோடு மாணவர்களின்எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதலாக வகுப்பறை கட்ட பாடசாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் கட்டிட பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்னர் அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்போது அங்கு ஏராளமான கண்ணிவெடிகள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.


இதனையடுத்து குறித்த பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அதன் வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருவததகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டில் எஞ்சி இருக்கும் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் முழுவதையும் அகற்றுவதை நோக்கமாக கொண்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles