NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கற்பிட்டியில் கரையொதுங்கிய மிகப்பெரிய திமிங்கிலம்…!

புத்தளம் – கற்பிட்டி கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய 30 அடி நீளமான திமிங்கிலம் பாதுகாப்பாக ஆழ்கடலில் விடுவிக்கப்பட்டது.

புத்தளம் – கற்பிட்டி, இப்பந்தீவு பகுதியில் 30 அடி நீளம் உடைய திமிங்கிலமொன்று நேற்று (08) காலை உயிருடன் கரையொதுங்கயுள்ளது.

அத்திமிங்கிலத்தை கண்ட மீனவர்கள், கற்பிட்டி வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, திணைக்கள அதிகாரிகள் கற்பிட்டி விஜய கடற்படையினரின் உதவியுடன் திமிங்கிலத்தை கடலின் ஆழமான பகுதியில் விடுவிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இத்திமிங்கிலம் Bryce’s Whale இனத்தைச் சார்ந்தது என கற்பிட்டி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 

Share:

Related Articles