NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப்பத்திரம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தவுடன் உரிய தீர்மானம் உடனடியாக அமுல்படுத்தப்படும் எனவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.

Share:

Related Articles