NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலநிலை அனர்த்தங்களால் 13 பேர் உயிரிழப்பு

கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 13 மரணங்கள் பதிவாகியுள்ளன.

அந்த மரணங்களில் நான்கு சிறுமிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்களால் ஐந்து பேரை காணவில்லையென்றும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலநிலை காரணமாக 20 மாவட்டங்களின் 177 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles