(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கால்நடைகளிடையே பரவி வரும் தோல் கழலை நோய், மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் பரவியுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மேல் மாகாணத்திலுள்ள கால்நடைகளிடையே தோல் கழலை நோய் தொடர்ந்தும் பரவி வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல கூறியுள்ளார்.
எனினும், இதுவொரு பெருந்தொற்று நிலைமை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.