சீனாவில் 15ஆவது இருந்து மாடியில் குழந்தைகளை ஜன்னல் வழியாக கீழே வீசிய இருவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தில் 2 வயதான பெண் குழந்தையையும் ஒரு வயதான ஆண் குழந்தையையும் நபர் ஒருவரும் அவரது காதலியும் 15 மாடியில் இருந்து கீழே வீசினர்.
இரு குழந்தைகளுக்கும் ஸாங் என்பவரின் சட்ட ரீதியான மனைவிக்கு பிறந்த குழந்தைகள். இந்த நபருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறியாமல் யே செங்சென் அவருடன் இரகசிய தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தமது உறவுக்கு குழந்தைகள் தடையாக இருக்கக்கூடும் எனக்கூறி குழந்தைகளை கொலை செய்யுமாறு காதலி, ஸாங்கை தூண்டியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்இ குழந்தைகளின் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் ஸாங், தனது கள்ளக்காதலியுடன் இணைந்து குழந்தைகளை ஜன்னல் வழியாக வெளியில் தூக்கி வீசியுள்ளார்.
எனினும் குழந்தைகளின் மரணம் தற்செயலாக நடந்த விபத்து என சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் போது கூறியிருந்தனர்.
பொலிஸார் மேற்கொண்ட விரிவான விசாரணைகளில் சந்தேக நபர்கள்இ குழந்தைகளை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, குற்றவாளிகளாக ஆண் மற்றும் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனாவில் வருடந்தோறும் ஆயிரக்கணக்கான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் அந்த தண்டனை நிறைவேற்றப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சர்வதேச ரீதியில் அதிகளான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் நாடு சீனா என மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.