NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற தாய் கைது!

தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சஸ் நகரை சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர், நேற்று முன்தினம் மாலை தனது ஒரு மாத குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து உணவை சூடுபடுத்த பயன்படும் மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார்.

மைக்ரோவேவ் ஓவன் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில் குழந்தையின் ஆடை மற்றும் குழந்தையை சுற்றிவைக்கப்பட்டிருந்த துணி வெப்பத்தால் கருகி எரிந்த புகை வாசனை வந்துள்ளது. எரிந்த புகை வாசனை வருவது குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், வீட்டின் மைக்கோவேவ் ஓவனில் படுகாயங்களுடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு பரிசோதித்தனர். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் குழந்தையின் தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குறித்தஇளம் தாய், மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

Share:

Related Articles