இந்தியா, கேரளா வயநாட்டில் ஏற்பட்ட மண்சரிவில் இதுவரையில் 316 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முண்டக்கை கிராம மண்சரிவில் சிக்கி 2 பாடசாலைகளைச் சேர்ந்த 27 மாணவர்கள் உயிரிழந்துள்ளதோடு 23 மாணவர்களைக் காணவில்லை.
மண் சரிவில் புதையுண்டவர்களை மீட்கும் பணிகள் நான்காவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், 3500க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய ஆய்வு விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மண்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியை ரிசாட் சார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து , அதுகுறித்து தகவல்களை அறிவித்துள்ளது.
அதன்படி, மண்சரிவு சுமார் 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.மேலும் சிக்குண்டவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
அனைத்து பகுதியும் சேறும், சகதியுமாக காணப்படுவதால் மீட்புப் பணிகளில் கடும் சிரமம் ஏற்பட்டு வருகின்ற நிலையில், இந்த ஸ்கேனர் உதவியுடன் சிக்குண்டவர்களை கண்டறிய முடியும். இதில் 1000க்கும் அதிகமானோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கேரளா அரசு தெரிவித்துள்ளது.பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.