NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று தலைப்பிறை பார்க்கும் மாநாடு

இன்று செவ்வாய்க்கிழமை (09) மாலை மஃரிப் தொழுகைக்குபின்னர் புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசல் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளி வாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles