(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள 47ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளின் இறுதி நிகழ்வான மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று (24) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.
போட்டித் தொடரின் முதல் நாளில் 8 போட்டி நிகழ்ச்சிகளின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றதுடன், 2 புதிய போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இன்று காலை நடைபெற்ற பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாணம் சார்பில் போட்டியிட்ட நேசராசா டக்சிதா தங்கப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 3.50 மீட்டர் உயரத்தை தாவியிருந்தார். இது புதிய போட்டிச் சாதனையாகவும் பதிவாகியது.