(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
1,000 முதல் 1,100 ரூபா வரையில் இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை தற்போது 1,500 முதல் 1,600 ரூபா வரை உள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை இருந்தபோதிலும், சந்தையில் வெள்ளை முட்டை சுமார் 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, சந்தையில் சிவப்பு நிற முட்டை ஒன்று 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.