NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சகல சமய ஸ்தலங்களின் சொத்து விபரப்பட்டியலை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பௌத்த விகாரைகள் உட்பட அனைத்து சமய ஸ்தலங்களின் சொத்துக்கள் பற்றிய விபரப்பட்டியலை தயாரிக்க புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் சர்வ மதத் தலைவர்களின் இணக்கப்பாட்டின் பேரில் அமைச்சின் சமய அலுவல்கள் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை திரட்டி வருவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

பல விகாரைகளில் சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் நிர்வாகக் குழுக்களின் ஆதரவைப் பெறும் முறைகள் மற்றும் அந்த இடங்கள் குறித்த சரியான தகவல்கள் இல்லாமை, விகாரைகளில் யானைகள் இருப்பது குறித்து அமைச்சில் தகவல் பதிவு செய்யப்படாமை போன்ற பிரச்சினைகள் காரணமாக இந்த கணக்கெடுப்பு நடத்தவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles