NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சகல சிசேரியன் சத்திர சிகிச்சைகளையும் இடைநிறுத்த தீர்மானம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

களுத்துறை போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்துகளின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக அனைத்து சிசேரியன் சத்திரசிகிச்சைகளையும் இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவமனையில் தற்போது இரண்டு நாட்களுக்கு போதுமான மயக்க மருந்துகள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி, சிசேரியன் செய்ய வேண்டிய கர்ப்பிணித் தாய்மார்களை போதிய மயக்க மருந்து உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்ற மருத்துவமனை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், நாட்டில் மயக்க மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், களுத்துறை வைத்தியசாலை அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்துமாறும் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

Share:

Related Articles