NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டால் அதற்கும் தயார்’ – பிள்ளையான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தனது பெயர் கூறப்படுவதற்கு இராஜாங்க அமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எதிர்ப்புத் தெரிவிக்க முயன்ற நிலையில் அவரை கொலையாளி என எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூறி குற்றச்சாட்டுக்களை அடுக்கவே அவர் அமைதியடைந்து விட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான முதல்நாள் விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி நிரோஸன் பெரேரா பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய போது உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு உள்ள தொடர்புகள் குறித்து பேசினார்.

இதனையடுத்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய பிள்ளையான், குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டால் அதற்கும் தயாராக உள்ளேன். எப்போது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வீர்கள் என்று குறிப்பிடுங்கள் என்றும் சபையில் கூறினார்.

Share:

Related Articles