NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சவோனா சர்வதேச தடகள சம்பியன்ஷிப் – யுபுனுக்கு இரண்டாம் இடம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சவோனா சர்வதேச தடகள சம்பியன்ஷிப் போட்டியின் 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் யுபுன் அபேகோன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டி இத்தாலியின் சவோனா நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் ஆரம்பச் சுற்றில் யுபுன் அபேகோன் 10.04 நொடிகளில் இலக்கை எட்டி இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

அதன்படி அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டியில் யுபுன் அபேகோனின் செயல்திறன் 10.01 நொடிகள் என பதிவு செய்யப்பட்டது.

இப்போட்டியில் இங்கிலாந்தின் ரீஸ் பிரெஸ்கோட் 9.9 நொடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles