NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிரேஷ்ட வானொலி ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் விபத்தில் உயிரிழந்தார்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

சிரேஷ்ட இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் இலண்டனில் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இலங்கை வானொலியின் மாபெரும் படைப்பாளரான இவர், எண்ணிலடங்காத ஊடகவியாளர்களுக்கும் ஒளிபரப்பாளர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர்.

நாடு கடந்தாலும் ஊடகப் பணியை தொடர்ந்து வந்தார். அச்சு ஊடகத்திலும் வானொலிக் கலையின் தாற்பரியத்தை உணர்த்தியவர் என பெருமைகொள்ளும் அளவிற்கு அவரது ஊடக பணி அளப்பரியது.

உலகத் தமிழ் வானொலியான பிபிசி வானொலியை கட்டியெழுப்பிய ஊடக ஜாம்பவான்களுள் இவர் மிக முக்கியமானவராவார்.

Share:

Related Articles