நாட்டில் இந்த நாட்களில் சுவாச நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, குழந்தைகளுக்கு இருமல், சளி அல்லது காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அவர்களை பாடசாலைக்கோ அல்லது பகல் நேர பராமரிப்பு மையங்களுக்கோ அனுப்பக் வேண்டாம் என வைத்தியர் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநேரம், இந்த வைரஸில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க பெற்றோர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.