சூடானில் இராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை இராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது.
இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில் சூடான் உள்நாட்டு போரால் சுமார் 48 இலட்சம் பேர் தங்களது சொந்த பகுதிகளை விட்டு இடம்பெயர்ந்ததாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.