NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சென்சார்கள் கொண்ட Smart Ring’ஐ அறிமுகம் செய்த Noise நிறுவனம்!

Noise நிறுவனம் தனது புதிய Luna Smart Ring மொடலை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் Noise நிறுவனம் Smart Ring பிரிவில் களமிறங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.

பயனர் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வகையில், ஏராளமான அம்சங்கள், டிராக்கிங் வசதி உள்ளிட்டவைகளை Luna Ring கொண்டிருக்கிறது.
சமீபத்தில் போட் நிறுவனம் தனது Smart Ringமொடலை அறிமுகம் செய்த நிலையில், தற்போது இந்த மொடல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Noise Luna Smart Ring மொடல் சௌகரியமாக உணர செய்யும் வகையில் குறைந்த எடையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் ரிங் 3 மில்லிமீட்டர் அளவில் மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது.

பைட்டர் ஜெட் தர டைட்டானியம் பாடி மற்றும் டைமன்ட் போன்ற கோட்டிங் வழங்கப்பட்டு இருப்பதால், நீண்ட கால பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில், ஸ்கிராட்ச்களை தாங்கும் வகையிலும், எளிதில் துரு பிடிக்காத வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

மேம்பட்ட சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பதால், உடல்நல விவரங்களை கச்சிதமாக அறிந்து கொள்ள முடியும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles