NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜன்னல் வழியாக விமானத்துக்குள் நுழைந்த விமானி !

அமெரிக்காவில் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாக்ரமெண்டோவுக்கு செல்ல தயாராக நின்ற ஒரு விமானத்தில் ஜன்னல் வழியாக விமானி ஒருவர் ஏறிக்குதித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இந்த படத்தை எடுத்த மேக்ஸ் ரெக்ஸ்ரோட் என்ற பயணிஇ இது ஜோக் இல்லைஇ பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லாக் ஆகிவிட்டது.

எனவே வேறு வழியின்றி குறித்த விமானி ஜன்னல் வழியாக விமானி அறைக்குள் ஏறிக் குதித்தார் என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், குறித்த விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles