ஜெனீவா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது.
இதில் சிலி வீரர் நிகோலஸ் ஜாரி, பல்கேரிய வீரர் கிரிகோர் டிமித்ரோவ் ஆகியோர் மோதினர்.
இதில் அதிரடியாக விளையாடிய நிகோலஸ் ஜாரி 7-6, 6-1 என்ற கணக்கில் வென்று, சாம்பியன் பட்டம் பெற்றார்.
நிகோலஸ் ஜாரி அரையிறுதியில் முன்னணி வீரர் ஸ்வரேவை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.