நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (23) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 654,995.85 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு வீழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 656,824 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,117 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை168,939 ரூபாவாக பதிவாகியுள்ளது.





