தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்து மூன்று வயது ஆண் பிள்ளை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் கம்பஹா மாவட்டம், வத்தளைப் பிரதேசத்தில் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது.
வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை திடீரெனக் காணாமல்போயுள்ளது. பெற்றோர் அவரைத் தேடியபோது குறித்த குழந்தை நீர் நிரம்பிய தொட்டிக்குள் விழுந்து கிடந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.