NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தந்தை – மகள் மீது அசிட் தாக்குதல் – முல்லேரியாவில் சம்பவம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

முல்லேரியா – அம்பத்தலே பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகள் மீது இன்று (11) காலை அசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீதியில் நின்ற ஒருவரினால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

அசிட் வீச்சில் காயம் அடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்த தந்தை கொழும்பு கண் வைத்தியசாலையிலும் மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles