NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனியார் விடுதியொன்றில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு…!

பதுளை மாவட்டம் – பண்டாரவளை பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விடுதியிலிருந்து எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்துடன், தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles