NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருடிய நகைகளை விழுங்கி பொலிஸாரை குழப்பத்தில் ஆழ்த்திய திருடன்… !

கம்பஹா, ஒருதொட்ட வீதியில் பயணித்த பெண்ணிடமிருந்து தங்க நகையை திருடி, அதனை விழுங்கிய நபர் தொடர்பில் யக்கல பொலிஸார் செய்தி வெளியிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்களின் தங்க நகையை பறித்து செல்ல முயற்சித்தப் போது அருகில் இருந்தவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இந்நிலையில் நகையை வைத்திருந்த திருடன் அதனை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், யக்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அதுல கமகேவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் பரிசோதகர் சரத் பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அந்த நகையை வெளியில் எடுப்பதற்காக சந்தேக நபரை கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share:

Related Articles