NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருமண வரவேற்பு விழாவில் புகுந்த கரடி : இணையத்தில் வைரல் !

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் ஒரு இளம்ஜோடியினரின் திருமண வரவேற்பு விழா இடம்பெற்றுள்ளது.
குறித்த விழாவில் பங்கேற்பதற்காக விருந்தினர்கள் திரளாக வந்திருந்ததோடு அவர்களுக்காக பல்வேறு இனிப்பு வகைகள் மற்றும் விதவிதமான உணவு பண்டங்கள் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திருமண வரவேற்பு விழா நடைபெறும் இடத்திற்குள் கரடி புகுந்துள்ளது. இதைப்பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதோடு அவர்கள் அங்கும் இங்குமாக ஓடி தப்பிய நிலையில் கரடி நேராக அங்கு வைக்கப்பட்டிருந்த இனிப்புகள் மற்றும் உணவு பண்டங்களை எடுத்து சாப்பிட்டுள்ளது.

பின்னர் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து கரடியை விரட்டி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. திருமண வரவேற்பு விழாவிற்குள் கரடி புகுந்து இனிப்புகளை சாப்பிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share:

Related Articles