துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்பரப்பில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கப்பலில் மொத்தம் 57 பேர் பயணம் செய்துள்ளதாகவும், இதில், 16 பேர் உயிரிழந்த நிலையில் 44 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேநரம், 2 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், இதில் அனைவரும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு மாத்திரம் சுமார் 90 ஆயிரம் புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு சென்றுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலோர் துனிசியா அல்லது அண்டை நாடான லிபியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.