(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
துருக்கி ஜனாதிபதி தேர்தலில் தாயீப் எர்டோகன் மீண்டும் ஜனாதிபதியாக தேர்தெருக்கப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடந்த இதில் தற்போதைய ஜனாதிபதி தாயீப் எர்டோகனும், எதிர்க்கட்சிகள் கூட்டணி வேட்பாளர் கெமல் கிலிக்டரோக்லும் போட்டியிட்டனர்.
தேர்தலில் வெற்றி பெற 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற வேண்டும் என்ற நிலையில், இதில் எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும், கெமல் கிலிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர்.
பெரும்பான்மை இருவருக்கும் கிடைக்காதமையால் நேற்று (28) ஜனாதிபதி தேர்தலின் 2ஆவது சுற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதில் துருக்கியின் ஜனாதிபதியாக தாயீப் எர்டோகன் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்று மீண்டும் தெரிவானார்.
அவருக்கு எதிராக போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லுவை 47.8 சதவீத வாக்குகளை மாத்திரம் பெற்றார்.
தனது 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ள எர்டோகனின் இந்த வெற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. அவர் ஏற்கனவே துருக்கி குடியரசின் நிறுவனர் முஸ்தபா கெமால் அட்டதுர்க்கின் 15 ஆண்டு ஜனாதிபதி பதவி சாதனையை முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.