NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தையிட்டி விவகாரம் – அமைச்சரிடம் கோரிக்கை கடிதம் சமர்பிப்பு!

தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வு கடிதம் ஒன்றினை தமிழ் – பௌத்த காங்கிரசினர், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளித்துள்ளனர்.

இந்த கோரிக்கை கடிதத்தை தமிழ் – பௌத்த காங்கிரசின் தலைவர் சிதம்பரமோகன், செயலாளர் கந்தையா சிவராஜா ஆகியோர் இணைந்து நேற்று அமைச்சரிடம் கையளித்துள்ளனர்.

குறித்த கடிதத்தில்,

தையிட்டி விகாரையானது தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சட்டவிரோத விகாரையை அகற்ற முடியாவிட்டாலும், அதற்கு அருகேயுள்ள மக்களது காணிகளையாவது உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையானது தனக்கு தேவையில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி மாளிகையை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து சமய பீடம் மற்றும் அரங்க கற்கைகள்
பீடங்களை அமைப்பதற்கு வழிசெய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles