NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொழிலாளர் சட்டத்தில் மாற்றம் – தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத நன்மதிப்புத்தொகை வழங்கப்பட வேண்டும் என சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்

தற்போதுள்ள 5 வருட சேவை மற்றும் 15 ஊழியர்களின் வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நவீன தொழில் உலகிற்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்ட முறைமைக்கான வரைவு சட்டமூலம் நேற்று (06) பிற்பகல் தொழிலாளர் ஆலோசனை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles