NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நகர அபிவிருத்தி அதிகார சபையின் 11 வேலைத்திட்டங்கள் நிறுத்தம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 வேலைத்திட்டங்கள் அரச நிறுவனங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த 11 திட்டங்களுக்காக சுமார் 2531 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

அத்துடன், இத்திட்டங்கள் முடக்கப்பட்டதன் காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு நன்மைகளை இழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Related Articles