NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடுநிலையாக போட்டியிடும் இலங்கை ரக்பி அணி !

ஹாங்சோ 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கொடியின் கீழ் இலங்கை ஆண்கள் ரக்பி செவன்ஸ் அணி போட்டியிட உள்ளது.

அரசியல் தலையீடுகள் தொடர்பான துணை விதிகளை மீறியதால் இலங்கை ரக்பி உலக ரக்பி கவுன்சிலால் மே மாதம் தடைசெய்ய‌ப்பட்டது.

ஏழாவது ரக்பி செவன்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளை, மஞ்சள் ,ஒரேஞ்சு ஆகிய OCA நிறங்களில் இலங்கை அணி விளையாட உள்ளது.

செப்டம்பர் 23 ஆம் திகதி OCA பதாகையின் கீழ் அணி தொடக்க விழாவில் இலங்கை ரக்பி அணி பங்கேற்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles