இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) என்ற சினிமா நட்சத்திரங்களின் புதிய கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமானது.
சென்னை சிங்கம்ஸ் (சூர்யா), மஜ்ஹி மும்பை (அமிதாப் பச்சன்), ஸ்ரீநகர் கே வீர் (அக்ஷய் குமார்), பெங்களூரு ஸ்டிக்கர்ஸ் (ஹிருத்திக் ரோஷன்), ஃபால்கன் ரைசர்ஸ் ஹைதராபாத் (ராம் சரண்), டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா (சாயிஃப் அலிகான்) உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றன.
மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று இடம்பெற்றது. இதில் டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா அணி வெற்றிப்பெற்று மகுடம் சூடியது.