NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘நட்பின் சிறகுகள்’ யாழ்ப்பாணத்தில்  துவிச்சக்கரவண்டி போட்டி!

இலங்கை விமானப் படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் ‘நட்பின் சிறகுகள்’ என்ற தொனிப்பொருளில் யாழ்பாணத்தில்  ஆண், பெண் இருபாலாருக்கும் இடையில் துவிச்சக்கரவண்டி போட்டி ஒன்று எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. 

குறித்த போட்டி, காலி முகத்திடலில் ஆரம்பமாகி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நிறைவடையும்.

இதேவேளை, பெண்களுக்கான போட்டியானது வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம்  வரை நடத்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து மார்ச் 6 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை முற்றவெளி மைதானத்தில்  கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை விமானப்படை நடத்தவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles