வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 09ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
நல்லூர் கந்தனின் மகோற்சவப் பெருவிழா தொடர்ச்சியாக 25 நாட்கள் இடம்பெறும்.இந்த நிலையில் ஆலயத்தின் வெளிச்சுற்றாடல் செயற்பாடுகளை யாழ் மாநகரசபை காத்திரமாக முன்னெடுக்கும். இன்று காலை 10 மணியளவில் மாநகர சபைக்கு மகோற்சவ பத்திரிகையும் காளாஞ்சியும் தேவஸ்தானத்தால் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.