(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வைத்தியர் பற்றாக்குறையினால் நாடளாவிய ரீதியில் சுமார் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில் உள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் நேற்று (27) சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மூடப்படவுள்ள வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்களை பரிந்துரைப்பதற்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஆதரவும் தேவை என அமைச்சர் இந்தக் கலந்துரையாடலில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான இடமாற்றங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையிலான குழுவினால் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.