நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை குறித்து இன்று அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இதேநிலை காணப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெப்பம் அதிகரித்துள்ள இந்நாட்களில் பொதுமக்கள் அதிகப்படியாக நீரை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், வெயில் காலங்களில் உடலுக்கு இலகுவான ஆடைகளையும் அணிந்துகொள்ளும்படி வைத்தியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.