நாட்டில் இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கபடவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்றும், நாளையும், நாளை மறுதினம் என இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் சுகாதார தரப்பினருடன் பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, வீடுகள் மற்றும் அலுவலக சுற்றுப்புறங்களில் சோதனைகளை மேற்கொண்டு டெங்கு ஒழிப்புத் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தி டெங்கு பரவலைக் கட்டுப்படுத்ததுவதே இந்த வேலைத் திட்டத்தின் நோக்கம் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன கூறியுளள்ளார்.





