NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜர் நாட்டில் இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் நாட்டில் இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் அந்நாட்டு ஜனாதிபதி முஹமட் பாசுமையும் சிறைபிடித்துள்ளனர்.

நைஜர் ஜனாதிபதி முஹமட் பாசும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார் என மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் நேற்று (25) பிற்பகுதியில் தோன்றிய வீரர்கள் குழு கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நைஜரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவ வீரர்கள் தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு ஆதரவாக தலைநகர் நியாமியில் பெருந்திரளான மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் இருந்த வீரர்கள் எதிர்ப்பை சமாளிக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஆப்பிரிக்க ஒன்றியம், ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Share:

Related Articles