கடந்த 18 ம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் பதுளை செங்கலடி பிரதான வீதியின் பசறை 13 ம் கட்டை பகுதியில் பாரிய கற்பாறைகள் வீதியில் சரிந்து விழுந்தமையினால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து கடந்த 7 நாட்களாக முற்றாக தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களினால் இன்று மதியம் வரை
பாறைகள் உடைத்து அகற்றப்பட்டு வீதியூடான போக்குவரத்து ஒற்றை வழி போக்குவரத்த்திற்காக இன்று மதியம் 12 மணியளவில் வீதி திறக்கப்பட்டு வழமைக்கு திரும்பியது.