NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பற்களை திருடி விற்ற வைத்தியர் கைது!

ஜப்பானில் பற்களை திருடி விற்ற வைத்தியர் ஒருவர் பொலிஸாரிடம் சிக்கி இருப்பது வைரலாகியுள்ளது.

அங்குள்ள கியூ{ மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த குறித்த வைத்தியர், மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால் அவரால் அனைத்து அறைகளுக்குள்ளும் சென்று வர முடிந்த நிலையில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறு சுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ஒன்றை (இந்திய பெறுமதி) கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அடிக்கடி பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு செய்த போது வைத்தியரின் திருட்டு அம்பலமானது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles