NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பலாங்கொடை ஓப்பநாயக்க உடவல விபத்து – 6 பேர் காயம்!



பலாங்கொடை – ஓப்பநாயக்க உடவல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாரிய காயங்களுடன் பெண் ஒருவர் உட்பட 6 பேர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெலிஹுல்ஓயா பிரதேசத்தில் இருந்து எஹலியகொடை பிரதேசத்திற்கு சென்ற டிபென்டர் ஒன்றும் உடவலவ பிரதேசத்தைச் சேர்ந்த மணல் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


டிபென்டரில் பயணித்த பெண் ஒருவர் உட்பட 5 பேரும் லொறியின் சாரதியும் உட்பட 6 பேர் பாரிய கரங்களுடன் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிபென்டரில் பயணித்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி மற்றும் கொழும்பு வைதிதியசாலைகளுக்கு அனுப்ப உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles