NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல்கலைக்கழக மாணவன் தற்கொலை…!

கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் 155 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் இன்றைய தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உயிரிழந்த மாணவன் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கணிதப்பிரிவில் கற்கும் மாணவன் என கூறப்படுகின்றது.இந்நிலையில் உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles