எரிபொருள் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கான கணக்கீடுகளை பூர்த்தி செய்த பின்னர் பஸ் கட்டணங்கள் திருத்தப்படுமா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரெண்டா தெரிவித்தார்.
இதேவேளை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தமானது பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு போதுமானதாக இல்லை என தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.