மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் உடஹமுல்ல இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவின் நடத்துநர் ஒருவரின் விரலை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடமிருந்த 7,300 ரூபாவை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது காயமடைந்த நடத்துநர், இங்கிரிய, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கிரிய நகரில் சேவையில் ஈடுபடும் பஸ்ஸில் பணிக்காக இன்று (27) காலை முச்சக்கரவண்டியில் இங்கிரிய நகருக்கு வந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.