பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் உள்ள தொடக்கப்பள்ளியொன்றின் அருகில் நேற்று (05) திடீரென பாரிய சத்தத்துடனான குண்டு வெடித்துள்ளது.
இத்தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில், மீட்பு படையினரால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதுகுறித்து பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன