NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாகிஸ்தானில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு !

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி இருந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்திய மதிப்பில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.290-க்கும்இ ஒரு லிட்டர் டீசல் ரூ.293-க்கும் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல்இ டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களில் எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.40 உயர்ந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles