NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சு அறிவிப்பு…!

நாட்டில் தொடர்ந்தும் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் வெளிப்புற செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பில் கல்வி அமைச்சர் விடுத்துள்ள புதிய அறிவிப்பில், நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடலின் சராசரி வெப்பநிலை சுமார் 37 பாகை செல்சியஸாக காணப்பட வேண்டும். இந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக மனித உடலில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்படுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறுஅதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles