NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 100 ரூபாவாக குறைக்க முடியும்!

கோதுமை மாவுக்கான இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை அரசாங்கம் நீக்கினால், பாண் ஒரு இறாத்தலின் விலையை 100 ரூபாவாக குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னர் எவரும் கோதுமை மாவை இறக்குமதி செய்ய முடியும் எனவும், அனுமதிப் பத்திரம் வழங்கப்படுவதன் காரணமாக சில நிறுவனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன் காரணமாகவே கோதுமை மாவின் விலையும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles